1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (16:12 IST)

ரஜினியின் 'ஜெயிலர்' படம்...அமெரிக்காவில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்

jailer
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வரும்  ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. 

சமீபத்தில்,  ரஜினியுடன், மோகன்லால்  அமர்ந்திருப்பது போன்ற  புதிய போஸ்டரை ஜெயிலர் படக்குழு வெளியிட்ட நாளில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஜெயிலர் படத்தின் 4 வது சிங்கிலான  ரத்தமாரே என்ற பாடலை  சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை மறுதினம் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றம்  23 ஆண்டாகியுள்ளதை முன்னிட்டும், ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவவுள்ளாதற்காகவும் அங்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார்,  ஜாக்கிஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.