ரஜினியின் ’’அண்ணாத்த’’ படம் முக்கிய அப்டேட் !
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் பெரும்பகுதி காட்சிகளை நடித்து முடித்துள்ளார். அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை சென்ற அவர் திரும்பி வந்த அவர் தேசிங்க் பெரியசாமி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் மீதிக் காட்சிகளை படம் பிடிப்பதற்காக கொல்கத்தாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அண்ணாத்த படத்தின் காட்சிகள் சென்னையில் உள்ள ஒரு மாலின் கார்பார்க்கிங்கில் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொல்கத்தா செல்லாததற்குக் கொரோனா பாதிப்பே காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கும்போதே டப்பிங் பணிகளும் தொடங்கியுள்ளதாம். முதலில் ரஜினிகாந்த் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை பேசி முடிக்கத் திட்டமிட்டுள்ளார் என்றதகவலும் வெளியானது.
எனவே, ரஜினிகாந்த், மீன, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன் தாரா போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிரது. இயக்குநர் சிவானின் பிறந்தநாள் அன்றுதான் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.