1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (18:31 IST)

கொரோனா வார்டில் ‘தர்பார்’ திரைப்படம்: சோதனை ஓட்டம்

கொரோனா வார்டில் ‘தர்பார்’ திரைப்படம்: சோதனை ஓட்டம்
கொரோனா வார்டில் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது
 
அந்த வகையில் மொபைல் போன், புத்தகங்கள் ஆகியவை கொரோனா வார்டுகளில் இருந்தாலும் தற்போது மேலும் புதிய வசதியாக திரைப்படம் ஒளிபரப்ப திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மன அழுத்தம் குறைவதற்காக திரைப்படம் யோகா ஆகிய ஆகிய வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
முதல் கட்டமாக கொரோனா வார்டில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் சோதனை ஓட்டம் நடைபெறுவதாகவும் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்கள் திரைப்படம் மற்றும் யோகா ஆகியவற்றால் மன அழுத்தத்தைப் போக்கி கொள்ளலாம் என்று கூறப்படுகிறது
 
கொரோனா  நோயாளிகள் பலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதை தவிர்க்கவே இந்த புதிய ஏற்பாடு என்று கொரோனா வார்டில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்