வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 மே 2019 (08:57 IST)

பார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து !

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் படைப்பில் அடுத்ததாக உருவாகும் ஒத்த செருப்பு படத்திற்காக அவருக்கு ஆஸ்கர் கிடைக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் அடுத்ததாக ஒத்த செருப்பு எனும் படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். இதுமாதிரி படம் முழுவதும் ஒருவரே நடித்து வெளியானப் படங்கள் உலக அளவில் மிகவும் குறைவு. இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் கே.பாக்யராஜ், இயக்குநர் ஷங்கர், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவுக்கு வரமுடியாத காரணத்தால் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் தனது வாழ்த்துகளை இந்தப் படத்துக்கு தெரிவித்துள்ளார். அதில் ‘பார்த்திபன் ஒரு வித்தியாசமான படைப்பாளி. புதிது புதிதாக சிந்தித்து. நிறைய நல்ல படங்களை அவர் கொடுத்திருக்கிறார்.

அவர் திடீரென படம் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்புக்கு வந்தவுடன் எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது.சமீபத்தில் அவரை சந்தித்தபோது அவர் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அப்போதுதான்  ஒத்த செருப்பு படத்தைப் பற்றி கூறினார். தனி ஒரு நபர் படம் முழுக்க வருவது வித்தியாசமான முயற்சி.

1960களில் யாதீன் என்ற படத்தை சுனில் தத் எடுத்தார். அந்தப் படத்திலும் அவரை தவிர வேறு யாரும் நடித்திருக்க மாட்டார்கள். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதன் பிறகு இந்தியாவில் இரண்டாவது முறையாகவும், தென்னிந்தியாவில் முதன்முறையாகவும் பார்த்திபன் இம்முயற்சியை எடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் அவரே கதை, வசனம் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். இது உலகிலேயே முதன்முறையாகும். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து ஆஸ்கர் விருதுகளுக்காக அனுப்பப்பட்டு விருதை வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.