வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (14:59 IST)

உங்க கதையில் நான் நடிச்சா எப்படி இருக்கும்? – ரஜினி கேட்டும் மறுத்த இயக்குனர் லிங்குசாமி!

கடந்த 2015ஆம் ஆண்டு  இந்த படம் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்திற்கு அந்நிறுவனம் இன்னும் மீண்டு வரவில்லை.

தனது திரையுலக பயணத்தை ஆனந்தம், ரன் என வெற்றிப் படங்களோடு தொடங்கிய லிங்குசாமி, மூன்றாவது படமாக ஜியில் சறுக்கினார். ரன் படத்துக்குப் பிறகு அவரை அழைத்துப் பாராட்டியுள்ளார் ரஜினி. அப்போது ஜி படத்தின் கதைப் பற்றி கேட்டு “இந்த கதையில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என கேட்டுள்ளார். ஆனால் லிங்குசாமி “இந்த கதை கல்லூரி மாணவன் ஒருவனின் கதை . அதனால் நீங்கள் நடித்தால் சரியாக இருக்காது. அண்ணாமலை போல அரசியல் இல்லாத கதையாக செய்வோம்” எனக் கூறியுள்ளார். இதை லிங்குசாமி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.