வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2023 (09:23 IST)

ரெட் ஜெயண்ட் மூவிஸில் இருந்து நான் எப்பவோ வெளியேறிட்டேன்.. உதயநிதி ஸ்டாலின் பதில்!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகியதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் சினிமா விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திலும், அவரின் பெயர் எடுக்கப்பட்டுள்ளது. வெறும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மட்டுமே இடம்பெறும் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இப்போது அவர் நடித்து ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்ற படத்தின் ரிலிஸுக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர் “நான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து பல மாதங்களுக்கு முன்னரே வெளியேறிவிட்டேன். என் படத்தையும் இப்போது அவர்கள்தான் ரிலீஸ் செய்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி” எனக் கூறியுள்ளார்.