பேட்ட படக்குழு அளித்த இன்ப அதிர்ச்சி: நன்றி சொன்ன ரஜினி
‘பேட்ட’ படப்பிடிப்பு திட்டமிட்டதற்கு முன்பாகவே முடித்துக்கொடுத்த படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன், சசிகுமார் மற்றும் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ரஜினியின் படத்துக்கு அனிருத் முதல்முறையாக இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் டேராடூன், சென்னை, லக்னோ மற்றும் காசி (வாரணாசி) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தது. இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடந்தது. இதில் த்ரிஷா சம்பந்தப்பட்டகாட்சிகள் படமாக்கப்பட்டன.
நவம்பர் 6-ம் தேதி படப்பிடிப்பு முடிவதாக இருந்தது. ஆனால், நேற்றே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
இதற்கு ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “15 நாட்களுக்கு முன்னதாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு முடிந்துளளது. இதற்கு காரணமான சன்பிக்சர்ஸ் நிறுவனம், கார்த்திக் சுப்பராஜ், ஒளிப்பதிவாளர் திரு மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.