செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 19 அக்டோபர் 2018 (19:16 IST)

பேட்ட படத்தின் ஷூட்டிங் முடிந்தது : சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த பேட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும்,அதனால் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும்  படக்குழுவுனருக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினி தன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 15 நாட்களுகு முன்பே படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் அதற்காக பேட்ட பட தயாரிப்பு நிறுவனமான  சன் பிக்சர்ஸ்க்கும் தன் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ,அதேசமயம் படக்குழுவினர் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.