1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 10 ஜனவரி 2019 (13:36 IST)

தனது ’அரசியல் இன்னிங்ஸை ’ஆரம்பித்த ரஜினி ! யாருமேல அந்த' கொல காண்டு '!

ரஜினி கட்சி தொடங்க போகிறேன் என்று சொல்லி ஒரு வருடம் தாண்டி விட்டது. இன்னும் அவர் கட்சியை அறிவிக்காமல் இருக்கிறாரே என்று அவரது ரசிகர்கள் கடுப்பாகினர். ஆனால் அரசியல் பஞ்ச் வசனங்கள் இடம் பெறுமாறு தன் படங்களில் பார்த்து பார்த்து வைத்து தனது ரசிகர்களுக்கு அதிரடி சினிமா விருந்து வைக்கிறார் ரஜினி.
அப்படி இன்று ரஜினி நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கயத்தில் வெளியாகியுள்ள பேட்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன்,த்ரிஷா, பாபி சிம்ஹா போன்றோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
 
ஆனால் இப்படியே படத்தில் நடித்துக் கொண்டிருந்தால் ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என்று அவரது ரசிகர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். 
 
சமீபத்தில் இந்தியாவில் நடந்த கருத்துக் கணிப்பில் ரஜினியின் மவுசு குறைந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
 
’அவரது அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு படத்தில் இடம் பெறும் பஞ்ச் வசனம் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.’
 
ஆகமொத்தம் படத்தில் அரசியல் வசனம் பேசி ஜெயித்து வரும் ரஜினி தனது நிஜ வாழ்வில் இனி வரப்போகிற அரசியலில் ஜெயிப்பாரா என்று பொருந்திருந்து பார்ப்போம்.