1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 20 ஏப்ரல் 2022 (16:46 IST)

ரஜினியை பின்பற்றும் கமல் ...ரசிகர்கள் மகிழ்ச்சி...புகைப்படம் வைரல்

vikram
விக்ரம் படத்தின் கமலின் புதிய விளம்பர யுக்தியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.  இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமக உருவாகி வரும் படம் விக்ரம்.

இப்படத்தின் கமலுடன் இணைந்து, விஜய்சேதுபதி, பகத்பாசில். அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர் நேசனல் பிலிம் தயாரிக்கிறது.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கமல் மற்றும் விஜய் சேதுபதியின் ஆக்சன் காட்சிகள் மட்டும் சுமார் 15 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டதாகவும், இது ரசிகர்களிடையே வரவேற்பை பெரும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினியின் கபாலி படத்தைப் போன்று விக்ரம் படத்திற்கு விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

விக்ரம் படத்திற்கு விளம்பரம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதால், இந்த விளம்பரம் குறித்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.