ரஜினி'' இந்த தேதியில் ''கட்சி தொடங்குவது நல்லது – ஜோதிடர் கணிப்பு
பல ஆண்டுகள் காத்திருப்புகளுக்குப் பின் தனது ரசிகர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப தனது அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினி, ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளுக்கு உள்ள வாக்குகளைப் பிரிக்கலாம் என்ற கருத்து பொதுவெளியில் நிலவுகிறது.
இருப்பினும் ரஜினியுடன் கூட்டணி கை கோர்க்க அவரது நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கட்சிகளை பேச்சுவார்த்தை நடத்தாலம் என்ற பேச்சும் நிலவுகிறது.
இதுஒருபுறமிருக்க அவர் பாஜகவின் நெருக்கடியலதான் அரசியல் கட்சித் தொடங்கவுள்ளார் என்ற குற்றச்சாட்டுநிலவுகிறது. ஆனால் இதை அக்கட்சி பிரமுகர் நடிகை குஷ்பு மறுத்துள்ளார்.
இந்நிலையில், ஆன்மீகப் பற்றுள்ள ரஜினி, ஒரு பிரபல ஜோதிடர், ரஜினி கட்சி தொடங்குவதற்குரிய தேதியை குறித்துக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
மேலும், திருமணம், முகூர்த்த, நேரத்திற்கும் அரசியல் கட்சி, அமைப்பு ஆரம்பிபதற்கும் சில வேறுபாடுகள் உள்ளதாகவும், எனவே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற நினைப்பில் கட்சி தொடங்கவுள்ள ரஜினிக்கு, ஜனவரி மாதம் 1 ஆம் தேதி தை, ஜனவரி மாதம் 18 ஆம் தேதியும், அன்று வளர்பிறை , திங்கட்கிழமை , சஹ்டி, திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் என்பதால் மதியம் 12.50 முதல் 1.115 வரை கட்சி ஆரம்பிப்பதற்உ ஏற்ற நாள் என்று கணித்துக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அதேபோல் தைமாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை, சதுர்த்தசி திதி,புனர்பூசம் நட்சத்திரம் , சித்தயோகம் கூடிய மேஷ லக்னம் என்பதால் காலை 11.10 முதல் 11.35 வரை அவருக்கு மிகவும் ஏற்ற நாள் என்றும்.
அடுத்து ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தைப்பூசம் என்பதால் இதுவும் நல்ல நாள் என்பதால் மேஷலக்னத்தில் கட்சி ஆரம்பிக்க ஏற்ற நாள் என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.#annatha #rajinikanthparty #janaury #tamilnadu