1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (16:37 IST)

தொலைக்காட்சித் தொடரிலும் சாதனை படைத்த நடிகர் ரஜினி

உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் பிரபலங்களுடன் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பந்திப்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. அன்று முதல் ரஜினி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே ஆவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பப்படுவதாக டிஸ்கவரி சேனல் ஏற்கனவே அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து இப்போது இந்த நிகழ்ச்சியின் 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.


இந்நிலையில்,கர்நாடக மாநிலம் பந்தியூர் புலிகல் காப்பகத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் வரும் வீடியோ வரும் 23 ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பியர் கிரில்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு ரஜினி பதிலளிப்பது போன்று இருந்தது.

பியர் கிரில்ஸ் கேட்கும் கேள்விக்கு ரஜினி, என் முழு வாழ்க்கையே அதிசயம் ஆனது என்றும் இந்த டிவி நிகழ்ச்சியே அதற்கு மிகச்சிறந்த உதாரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன் தான் டிவி சேனலில் கலந்துகொள்வேன் என நினைத்துப்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த செய்திகள் சமூக வலைதளங்கள் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில், சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வசூல் சாதனை படைத்துவரும் ரஜினி, முதன் முதலாக டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அவரது ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை அளித்தது. பல்வேறு திரை நட்சத்திரங்களும் ரஜினிக்கு வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்..

இப்போது, பியர் கிரில்ஸுடன் ரஜினிகாந்த் கலந்துகொண்ட நிகழ்ச்சி 4 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.  இந்த எபிசோட் 12.4 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், தொலைக்காட்சி வரலாற்றில் அதிகம் பேர் பார்த்த 2 வது நிகழ்ச்சி எனவும் தகவல் வெளியாகிறது. அதேசமயம் மற்ற முன்னணி பொழுபோக்கு நிகழ்ச்சிகளின் பிரீமியரை விட ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சிக்கான பிரீமியம் 20 மடங்கு அதிகரித்துள்ளது எனவும் தகவல் வெளியாகின்றது.