ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 16 ஜனவரி 2019 (10:40 IST)

கோவையில் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

கோவையில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைத்து, நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.
கோவையை அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில், கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 
 
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாயத்தினர் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கலை வைத்து கொண்டாடினர். பிறகு பறை இசையுடன் ரஜினி ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
 
இந்த பொங்கல் பண்டிகைக்கு பேட்ட படம் வெளியாகி உள்ள நிலையில், தங்களுக்கு இது பேட்ட பொங்கல் என உற்சாகமாக தெரிவித்தனர்.