வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (16:23 IST)

ரஜினி குடும்பம் ஆட்சேபிக்கும் இரண்டு தலைப்புகள்!

சமீபத்தில் ரஜினி என்ற பெயரில் ஏ வெங்கடேஷ் ஒரு படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபலங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் புனைப்பெயர்களில் திரைப்படங்களுக்கு தலைப்பு வைத்தால் வெகுஜனங்களிடம் எளிதாக சென்று சேரலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் ரஜினி என்ற படம் உருவாவதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த தலைப்பு வைக்க ரஜினிகாந்தின் குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளாராம்.

இந்நிலையில் விரைவில் சிம்பு மற்றும் கௌதம் மேனன் இணையும் படத்துக்கு சூப்பர் ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்போவதாக சொல்லப்படுகிறது. அதற்கும் ரஜினி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என சொல்லப்படுகிறது.