செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (16:49 IST)

ரசிகர்களை ஈர்க்கவில்லையா அண்ண்ணாத்த பாடல்?

ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் பாடல் நேற்று முன்தினம் வெளியானது.

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் சிங்கிள் பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த பாடலுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய கடைசி பாடல் இதுதான். இந்த பாடல் நேற்று முன்தினம் வெளியானது.

கலவையான விமர்சனங்களையே பெற்ற இந்த பாடல் வெறும் 4.7 மில்லியன் பேரால் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக ரஜினி படத்தின் பாடல்களுக்கு கிடைக்கும் எண்ணிக்கையை விட இது மிகக் குறைவு. இதனால் பாடல் ரசிகர்களைக் கவரவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.