செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (11:47 IST)

மிசா கைதியாக நடிக்கும் ரஜினி! பேட்ட அப்டேட்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் பேட்ட இந்த படத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக  ரஜினி நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்,  கேங்ஸ்டர் கதையில் மீண்டும் ரஜினி நடிப்பதாக கூறப்படுகிறது.

அறம் படத்தில் நடித்த ராமச்சந்திரன் தற்போது பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.  இவர் ரஜினியுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் ரஜினியின் வலது கையில் ஒரு செம்பு கம்பி உள்ளது. அதில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

1975ல் இந்திராகாந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அவசர சட்டத்தின்கீழ் பலர் கைதானார்கள். எனவே ரஜினியின் கையில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பதால் இந்த படம் மிசா சட்டம் பிரகடனம் செய்யப்பட்டபோது நடக்கும் கதையில் உருவாகலாம் என்று  கோலிவுட்டில் சொல்கிறார்கள்.