ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (15:15 IST)

பிரபாஷின் சலார் பட முதல் டிக்கெட்டை வாங்கிய ராஜமெளலி

salaar -prabash- prashanth neels
பிரபாஷின் சலார் பட முதல் டிக்கெட்டை இயக்குனர் ராஜமெளலி வாங்கியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர்  பாகுபலி படத்திற்குப் பின் பான் இந்தியா நடிகராக புகழ்பெற்றுள்ளார்.

இவரது ஒவ்வொரு படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்த போதிலும் ராதேஷ்யா, ஆதிபுரூஸ் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

இந்த நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன்,டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் சலார்.

இப்படத்தின் டீசர், டிரைலர் சமீபத்தில் வைரலான நிலையில், வரும் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நுலையில் 2 மணி  நேரம் 55 நிமிடம் ரன்னிங் டைம் ஆகும்.

இப்படத்தின் தயாரிப்பாளர் நவீன் எர்னேனி மற்றும் படக்குழுவிடம் இருந்து இயக்குனர் ராஜமெளலி சலார் பட முதல் டிக்கெட் பெற்றுக் கொண்டார்.இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.