வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:21 IST)

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது பாராட்டுகளைப் பெற்ற ரயில் திரைப்படம் !

எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி வடக்கன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் சென்சாரில் இந்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து ‘ரயில்’ எனப் பெயர் மாற்றப்பட்டு ஜூன் 21 ஆம் தேதி ரிலிஸ் ஆனது.

இந்தப் படமானது வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களைப் பற்றிய படமாக உருவாகி இருந்தது. அதனால் இங்குள்ள மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே முளைக்கும் வெறுப்பு மற்றும் பாசம் போன்றவற்றை எதார்த்தமாக சொல்லும் படைப்பாக அமைந்திருந்தது.

இந்த படம் நல்ல பாராட்டுகளைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் இந்த படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. திரையரங்கில் வெளியானதில் இருந்து 12 நிமிட நேரம் குறைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாகியுள்ளது.