1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 12 நவம்பர் 2022 (18:23 IST)

சாட்டையால் அடித்துக் கொண்ட ராகுல்காந்தி

RAGUL GANDHI
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதி எம்பியுமான ராகுலாந்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தி தற்போது பாத யாத்திரை செய்து வருகிறார்.

சமீபத்தில், கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இப்பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மா நிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில்  நிறைவு செய்யவுள்ளார்.

இந்த நிலையில், தற்போது ராகுல்காந்தி தெலுங்கானாவில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது, அவரைப் பார்த்த காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும்  உற்சாகம் அடைந்தனர். பின்னர், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநில பழங்குடியின கலைஞர்கள் ராகுல் காந்தியை வரவேற்று  நடனமாடினர்., அவர்களுடன் ராகுலும் நடனமாடினார்.

மேலும், தெலுங்கானாவில் கொண்டாடப்படும் பொனாலு பண்டிகையிலும் அவர் கலந்துகொண்டார். அப்பண்டிகையில் சாட்டாயால் தன்னை தானே அடிக்க  வேண்டும் என்பதால், ராகுல்காந்தியின் சாட்டையால் தாக்கிக் கொண்டார்.  இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Edited by Sinoj