ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (13:50 IST)

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் தகவல்!

பிரபாஸ் நடித்த ‘ராதே ஷ்யாம்’திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்தின் மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் ‘ராதே ஷ்யாம்’படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என்றும் அதாவது இரண்டரை மணி நேரங்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு குறைந்த பின்னர் வெளியாகும் முதல் படமாக ‘ராதே ஷ்யாம்’இருக்கும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.