வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (10:32 IST)

காலம் மாறிடுச்சி… அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்- இயக்குனர் சுந்தர்ராஜன்!

இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் இயக்கியுள்ள முதல் திரைப்படம் அனபெல் சேதுபதி.

கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பிறகு விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படத்தின் பெயர் அனபெல் சுப்ரமண்யம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அனபெல் சேதுபதி என மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையில் ரிலிஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் செப்டம்பர் 17 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்த படத்தை இயக்கியுள்ள தீபக் சுந்தர்ராஜன் பழம்பெரும் இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் ஆவர். அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர் சுந்தர்ராஜன் ‘ என் மகனின் முதல் படம் ஓடிடியில் வெளியாவதில் வருத்தம் இல்லை. ஏனென்றால் காலம் மாறி புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. என் காலத்தில் படம் பார்க்க கோயம்புத்தூருக்கு செல்வேன். ஆனால் இப்போது என் கையில் இருக்கும் செல்போனிலேயே உலகம் வந்துவிட்டது’ எனக் கூறியுள்ளார்.