ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (18:10 IST)

மீண்டும் நன்கொடை கேட்கும் ஆர் கே செல்வமணி! கொடுப்பார்களா கதாநாயகர்கள்!

கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு கதாநாயக நடிகர்கள் நன்கொடை வழங்கவேண்டும் என பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி கோரிக்கை வைத்துள்ளாராம்.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கபப்ட்ட துறைகளில் சினிமாத்துறையும் ஒன்று. அரசின் அங்கிகரிக்கப்பட்ட தொழில் துறை இல்லை என்பதால் அரசிடம் பெரிதாக நிவாரண உதவிகளும் இந்த துறைக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர் கே செல்வமணி ‘ தமிழ் சினிமாவை நம்பி 60 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 200 படங்கள் வரை ரிலீஸாகி வந்தன. ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனாவால் கடுமையாக திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கொரோனா முதல் அலை பரவலின் போது தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் எல்லாம் நன்கொடை அளித்து உதவினர். ஆனால் இப்போது இரண்டாம் அலை பாதிப்புக்கு யாரும் வழங்கவில்லை. இதையடுத்து நடிகர்களிடம் சினிமா தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர் கே செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார்.