புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (14:39 IST)

ரசிகர்களொடு ‘வீட்ல விசேஷம்’ படத்தின் இசை வெளியீடு… R J பாலாஜி வெளியிட்ட அப்டேட்!

R J பாலாஜி நடிக்கும் வீட்ல விசேஷம் படத்தின் இசை வெளியீடு நாளை நடக்கிறது.

வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு  வீட்ல விஷேசம் என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. வீட்ல விஷேசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜுன் 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் ஐபிஎல் போட்டியின் போது  வெளியிடப்பட்டது.

இதையடுத்து நாளை இந்த படத்தின் இசை வெளியீடு, நாளை சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடக்க உள்ளது. இந்த விழாவுக்கு ரசிகர்களை அழைத்துள்ள பாலாஜி, வரும் ரசிகர்கள் படக்குழுவோடு புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.