புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (15:14 IST)

ஆர் ஜே பாலாஜி போனி கபூர் கூட்டணி- நாளை வெளியாகிறது முக்கிய அப்டேட்!

நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தின் முதல் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நாளை பர்ஸ்ட் லுக் போஸ்டரோடு ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.