புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (15:46 IST)

அடுத்த படத்தின் ரிலிஸ் அப்டேட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி!

ஆர் ஜே பாலாஜி இப்போது பதாய் ஹோ படத்தின் ரீமேக்கில் நடித்து இயக்கி வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்றை ஆர் ஜே பாலாஜி இன்று வெளியிட்டுள்ளார். மார்ச் 18 ஆம் தேதி இந்த படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இந்த அறிவிப்போடு அவர் அவர் வெளியிட்டுள்ள போஸ்டர் வீட்டில் வளைகாப்பு நடப்பது போல மங்களகரமாக வடிவமைத்துள்ளனர்.