புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:09 IST)

மாஸ்டர் படத்தின் க்விட் பன்னுடா பாடல் ரிலிஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள க்விட் பண்ணுடா என்ற பாடல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இணையத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திரையரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காரணமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ள படம் என்றால் அது மாஸ்டர்தான். கிட்டத்தட்ட ரிலீஸுக்கு இரு வாரங்களுக்கு முன்னால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அந்த படத்தை வாங்கியவர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள Quit பன்னுடா என்ற பாடல் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இசை வெளியீட்டில் இந்த பாடல் மட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.