செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (09:50 IST)

குட்டி விஜய் சேதுபதியாக நடித்தது இவர்தான்… மாஸ்டர் அப்டேட்!

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் இளவயது தோற்றத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை என்றாலும் இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திரையரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பார்வையாளர்கள் வருவார்களா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காரணமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ள படம் என்றால் அது மாஸ்டர்தான். கிட்டத்தட்ட ரிலீஸுக்கு இரு வாரங்களுக்கு முன்னால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அந்த படத்தை வாங்கியவர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரின் பதின் பருவ போர்ஷனில் அவருக்குப் பதிலாக மாஸ்டர் மகேந்திரன் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். ஆனால் அந்த கேரக்டரும் சேர்த்து விஜய் சேதுபதியே படத்தில் டப்பிங் பேசியுள்ளாராம்.