புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:20 IST)

’’ரியாலிட்டி ஷோவின் குயின் ...’’ஓவியாவைப் புகழ்ந்த பிரபல நடிகை

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழக்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபல சேனலில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இளைஞர் முதல் முதியோர் வரை பலரும் ஆதரவு தெரிவித்தனர்.இந்நிலையில், கடந்தாண்டுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளன.  அடுத்து இந்த ஆண்டு  4வது சீசனில் யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

இந்நிலையில் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ஆனால் அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார். இன்று ஓவிய தனது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.

இன்று ஷனம் ஷெட்டி ஓவியாவின் காமன் டிபிஐ வெளியிட்டு ஒவியாவைப் புகழ்ந்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:  டிவி ரியாலிட்டி ஷோவில் முதலில் எல்லோருடைய மனங்களையும் வென்றவர் ஓவியா. அவர்தான் ரியாலிட்டி ஷோக்களின் முதல் ரியல் குயின். அவரது குணத்திற்காகா அவர் நினைவு கூறப்படவேண்டும்…தோழி ஓவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளர்.