இந்திய சினிமா வசூலில் மைல்கல் தொட்ட புஷ்பா 2… 6 நாளில் 1000 கோடி ரூபாய்!
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸானது இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான புஷ்பா 2. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்துள்ளது.
இந்த படம் தொடர்ந்து இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ஓடி வருகிறது. இந்நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளதன் படி புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் ஆறே நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் இவ்வளவு குறுகிய நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.