1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2024 (08:11 IST)

முதல் நாளில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்ததா புஷ்பா 2?

நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் நேற்று ரிலீஸானது இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான புஷ்பா 2’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட ஏகோபித்த வரவேற்புக்குக் காரணம் இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களின் மத்தியில் புஷ்பா 2 திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது.

நேற்று படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் மிகப்பெரிய சாதனையை புஷ்பா 2 நிகழ்த்தும் என சொல்லப்படுகிறது. முதல் நாள் வசூல் 200 கோடியைத் தாண்டியிருக்கும் என சொல்லப்படுகிறது. இது இந்திய சினிமாவில் எந்த திரைப்படமும் வசூலிக்காத முதல் நாள் வசூல் சாதனையாக அமையும் என தெரிகிறது.