ரஜினியை அவமானப்படுத்திய தயாரிப்பாளர் இவர்தானாம்… வெளியான தகவல்!
நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் தன்னை அவமானப்படுத்திய ஒரு தயாரிப்பாளரைப் பற்றி கூறியிருந்தார்.
ரஜினிகாந்த் ஆரம்பகாலங்களில் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார். அதன் பின்னரே அவருக்கு கதாநாயகன் வாய்ப்புக் கிடைத்தது. இந்நிலையில் ரஜினி வளர்ந்து வரும் காலங்களில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்த போது சம்பளப்பாக்கியைக் கேட்டதால் அந்த தயாரிப்பாளர் ரஜினியை மிரட்டி சினிமாவை விட்டே உன்னை காணாமல் போகும்படி செய்துவிடுவேன் எனக் கூறியதாக தர்பார் ஆடியோ ரிலீஸ் விழாவில் பேசினார். அதன் பிறகு ஹீரோவாகி வெளிநாட்டு காரில் அதே தயாரிப்பாளர் முன்னால் சென்று கெத்தாக இறங்கினேன் எனக் கூறிய போது அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.
ஆனால் மரியாதைக் காரணமாக அந்த தயாரிப்பாளர் யார் என்பது குறித்து ரஜினி எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் அந்த தயாரிப்பாளரின் பெயர் சிவசுப்ரமண்யம் என்று சினிமா பத்திரிக்கையாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.