வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (08:55 IST)

ரஜினிக்காக கதை வைத்திருக்கிறேன்… என் தலையில் எழுதியிருந்தால் நடக்கும் – இளம் இயக்குனர் பதிவு!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ரஜினிக்காக ஒரு கதை எழுதி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார் இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு  5 ஆண்டுகளாக அவர் அடுத்த படத்தை பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். மேலும் அந்த படத்துக்கு தானே இசையமைப்பதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர் ரஜினியை இயக்குவீர்களா என்ற கேட்டதற்கு பதிலளித்த அவர் ‘ரஜினி சாருக்காக ஒரு கதை எழுதி இருக்கிறேன். பிரேமம் படத்துக்குப் பின்னர் அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் நடக்கவில்லை. ரஜினியை வைத்து படமெடுக்க வேண்டுமென்று என் தலையில் எழுதி இருந்தால் அது நடந்தே தீரும். நாம் பாதி வேலையை செய்தால் மீதியை கடவுள் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இப்போது கடவுள் கொரோனாவை அழிப்பதில் பிஸியாக இருக்கிறார். அதன் பிறகு முயற்சிக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.