வியாழன், 13 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2025 (07:47 IST)

விடாமுயற்சி தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலிக்கும்… அடித்து சொல்லும் பிரபலம்!

நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல தாமதங்களைக் கடந்து கடந்த 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. படத்தில் அஜித்தோடு த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்க, லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இரண்டாண்டுகள் தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்க்க முடியாத ஏக்கத்தை கொண்டாடித் தணித்தனர்.

வழக்கத்துக்கு மாறாக அஜித் இந்த படத்தில் அடக்கி வாசித்துள்ளார் என்று பாராட்டுகள் எழுந்தாலும், படத்தில் சுவாரஸ்யம் என்பது மருந்துக்கும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் முதல் நாளுக்குப் பின்னர் படிப்படியாக வசூல் வீழ்ச்சியடைந்தது. ஆனால் படம் ரிலீஸுக்குப் பிறகு பேசியுள்ள இயக்குனர் மகிழ் திருமேனி “நானும், அஜித் சாரும் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் “விடாமுயற்சி படம் தமிழ்நாட்டில் இப்போதே 70 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்கிறார்கள். இன்னும் வரிசையாக விடுமுறை நாட்கள் உள்ளன. அதனால் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.