புதன், 11 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2024 (15:12 IST)

’தளபதி 69’ படத்தில் இணைந்த 3வது நாயகி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Vijay Movie
தளபதி விஜyயின் 69வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் நிலையில், இதில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இரண்டு நாயகிகள் குறித்த தகவல்கள் வெளியாகிய நிலையில், சமீபத்தில் மூன்றாவது நாயகியும் படத்தில் இணைந்துள்ளார்.
 
தளபதி விஜய், இயக்குனர் எச்.வினோத், மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து உருவாக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமீதா பாஜு ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், சில மணி நேரங்களுக்கு முன்பு இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனும் படத்தில் இணைந்துள்ளார்.
 
இப்போது, தேசிய விருது பெற்ற பிரபல நடிகை பிரியா மணி 'தளபதி 69' படத்தில் இணைந்துள்ளார். இதன் மூலம், படத்தில் இடம்பெறும் நட்சத்திர பட்டாளம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ஐந்து முக்கிய நட்சத்திரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில ஆச்சரியங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran