ரெஸ்டாரெண்ட் தொடங்குகிறார் ப்ரியா பவானிசங்கர்.. வைரலாகும் வீடியோ
நடிகை பிரியா பவானி சங்கர் விரைவில் ரெஸ்டாரண்ட் தொடங்க இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது கனவு விரைவில் நனவாக போகிறது என்றும் விரைவில் ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கப் போவதாகவும் மக்களுக்கு சேவை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது நீண்ட நாள் கனவு நனவாக உள்ளதை அடுத்து தான் மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன், பிரியா பவானி சங்கர் கடலோர பகுதி ஒன்றில் சொந்த வீடு வாங்கியதாக தெரிவித்திருந்தார். தற்போது அவர் ரெஸ்டாரண்ட்டையும் திறக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva