கைம்மாறும் 96 படத்தின் இரண்டாம் பாகம்.. திரைக்கதைப் பணிகளில் பிரேம்குமார்!
96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குனர் பிரேம் குமார் அதன் பின்னர் கார்த்தி, அரவிந்த் சுவாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் தன்னுடைய முதல் ஹிட் படமான 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது அதற்கான திரைக்கதைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் பிரேம்குமார். இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல் பாகத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவில்லை என்றும் வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
96 படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆகி தோல்விப் படமாக அமைந்தது. இதுபற்றி ஒரு நேர்காணலில் பேசிய பிரேம்குமார் “ 96 படத்தை ரீமேக் பண்ணலாம் என்ற பேச்சுவார்த்தை தொடங்கிய போதே அதை பண்ணவேண்டாம் என சமந்தா கூறினார். ஆனால் பின்னர் அவரே அதில் நடிக்க வேண்டிய சூழல் வந்தது. அந்த படம் எடுக்கும் போதே இது ஓடாது என தெரிந்துவிட்டது. ஏனென்றால் தென்னிந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் அந்த படத்தைப் பார்த்துவிட்டார்கள்.” எனக் கூறியிருந்தார்.