மீண்டும் திருமணம் செய்த பிரகாஷ்ராஜ்
தென்னிந்திய சினிமாவில் சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் திருமணம் செய்துகொண்டார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் கே.பாலசந்திரர் அவர்களால் டூயட் படத்தில் அறிமுகம் ஆனவர் பிரகாஷ்ராஜ். இவர் தனது நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தார். அனைத்து வகை கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தாலும், கில்லி, சிங்கம் உள்ளிட்ட படங்களில் சிறந்த வில்லன் நடிப்புக்காகப் பேசப்பட்டார்.
இந்நிலையில், இவர் நடிகை லலிதா குமாரியை 1994 ல் திருமணம் செய்தார். பின்னர் 2009-ல் இவர்கள் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து 2010 ல் போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் திருமணம் செய்தார். இவர்களின் 11 ஆம் ஆண்டு திருமணம் நாள் இன்று என்பதால் அவர்களின் மகன் வேதாந்த் வேண்டுதலுக்கு ஏற்ப இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.