கர்ப்பிணி மனைவிக்கு மஞ்சள் பூசும் மஹத் - சூப்பர் ரொமான்டிக் வீடியோ!

Papiksha Joseph| Last Updated: வியாழன், 13 மே 2021 (17:20 IST)

நடிகர் மஹத் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் பரீச்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார்.
இதனால் அந்த நிகழ்ச்சியில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால், அவருக்கு வெளியில்
பிராச்சி மிஸ்ரா என்ற காதலி இருந்தார். யாஷிகா விஷயத்தால் இவர்கள் காதலில் சற்று விரிசல் ஏற்பட்டு பின்னர் மீண்டும் சேர்ந்தனர்.

அதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் விருப்பிய பெண்ணையே திருணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் பொறுப்புகளை சுமந்தார். தற்போது மனைவி பிராச்சி மிஸ்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு மஹத் வளைகாப்பு நடத்தி மஞ்சள் பூசி முத்தமிட்ட ரொமான்டிக் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

கர்ப்பமாக இருப்பதை அழகிய புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். அவருக்கு நண்பர்கள் , திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :