செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 13 மே 2021 (17:10 IST)

ஆடுகளத்தில் த்ரிஷா…வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்....புகைப்படம் வைரல்

வெற்றிமாறன் இயக்கி தனுஷ் மற்றும் டாப்சி ஆகியோர் நடித்து 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்தின் 10 ஆண்டுகள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தனுஷ், டாப்சி மற்றும் எழுத்தாளர் ஜெயபாலன் ஆகியோர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்டோருக்கு 6 தேசிய விருதுகளைப் பெற்றது. மிகச்சிறந்த திரைக்கதை அமைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார் வெற்றிமாறன்.

சமீபத்த்ல்  ஆடுகளம் படத்தின் 10 ஆண்டுகள் நிறைவடைந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.. இதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறன் அளித்த நேர்காணலில் ‘முதலில் இந்த படத்துக்கு சண்டக்கோழி என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால் அந்த பெயரில் ஏற்கனவே ஒரு படம் வெளியாகிவிட்டது. அதனால் சேவல் என பெயர் வைக்கலாம் என முடிவு செய்தோம். ஆனால் அந்த பெயரில் இயக்குனர் ஹரி ஒரு படத்தை இயக்கி வந்ததால் வேறு வழி இல்லாமல் ஆடுகளம் எனப் பெயர் வைத்தோம்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது மற்றொரு முக்கிய தகவலை வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

அதில், ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது த்ரிஷா தான். ஆனால் முதல் ஷெட்யூகுக்குப் பின் எங்கள் தரப்பில் தாமதம் ஆகவே திரிஷா இந்திபடத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்ததால் இப்படத்திலிருந்து விலகினார்.

பின்னர், இயக்குநர் மாதேஷ், தான் ஒருவரை பார்த்திருப்பதாகக் கூறி என்னிடம் அவரது புகைப்படத்தைக் காட்டினார். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. அதன்பின்னர் நேரில்சென்று அவரைப் பார்த்தோம். அவர்தான் நடிகை டாப்ஸி எனக் கூறியுள்ளார்.

டாப்ஸியின் முதல் தமிழ்ப் படம் ஆடுகளம். இதன்பின்னர், காஞ்சனா, ஆரம்பம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துப் புகழ்பெற்று இன்று இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

மேலும் ஆடுகளம் படத்தில் திரிஷா –தனுஷ் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.