திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (16:15 IST)

பிரபல பாடலாசிரியர் காலமானார்- ரசிகர்கள் அதிர்ச்சி

biyar prasad
பிரபல மலையாள பாடலாசிரியர்களில் ஒருவரான பீயார் பிரசாத் இன்று காலமானார். அவரது மறைவுக்குப் பாடலாசிரியர்களும், சினிமா கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

கேரள மா நிலம் குட்ட நாடு மான் கொம்பு என்ற பகுதியில் கடந்த 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் பீயார் பிரசாத்.

இவர்,பிரியதர்ஷன் இயக்கிய கிளிச்சுந்தன் மாம்பழம் என்ற படத்தில், வித்தியாசாகம் இசையில் 6 பாடல்கள் எழுதியிருந்தார்,

இதுவரை மலையாள சினிமாவில் 600 பாடல்கள் எழுதிப் புகழ்பெற்ற இவர், தமிழில் இளையராஜா இசையில் டிவிங்கில் டிவிங்கில் லிட்டில் ஸ்டார் என்ற பாடலை எழுதியுள்ளார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு ஜானி என்ற படத்திற்காக திரைக்கதை எழுதியுள்ளார். அத்துடன் சுஹாசினி நடித்த தீர்த்தனம் என்ற படத்தில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

.2019 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்றறு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட இவர்,   நேற்று திடீரென்று உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு சினிமா துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.