புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (15:31 IST)

பிரபல சினிமா மற்றும் நாட்டுப்புற பாடகி ரமணி அம்மான் காலமானார்

ramaniyammal
பிரபல நாட்டுப்புற பாடகியும், சினிமா பின்னணி பாடகியுமான ரமணிஅம்மாள் இன்று மாரடைப்பால் காலமானார். 

தமிழ் நாட்டில் பிரபல நாட்டுப்புற பாடகியும், சினிமா பின்னணி பாடகியுமான ரமணி அம்மாள்  உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

சில ஆண்டுகளுக்கு முன், பரத் நடிப்பில் வெளியான காதல் என்ற படத்தில்' தண்டட்டி கருப்பாயி' என்ற பாடல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரமணி அம்மாள்.

இவர்,  விஜய்சேதுபதியின் ஜூங்கா படத்தில்' ரைஸ் ஆப் டான்', சண்டக்கோழி படத்தில் இடம்பெற்ற 'செங்கரத்தான் பாறையுல ' பாடலையும், காப்பான் படத்தில், சிரிக்கி என்ற பாடலையும் பாடியுள்ளளார்.

சினிமாவில் மட்டுமின்றி, சின்னத்திரையிலும், நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்த நிலையில், சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரமணி அம்மாள் இன்று மாரடைப்பாள் காலமானார். அவருக்கு வயது 63 ஆகும்.

இவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் கூறி வருகின்றனர்.