வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (17:33 IST)

பிகில் சிறுவனுக்கு அடித்தது யோகம்: அடுத்தடுத்து குவியும் படவாய்ப்புக்கள்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில்’ திரைப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் சூப்பர் ஹிட் என்பது தெரிந்ததே. இந்த பாடலில் விஜய்யுடன் பூவையர் என்ற சிறுவனும் பாடி உள்ளதோடு இந்த பாடலில் ஒரு சில காட்சிகளில் நடனமும் ஆடி இருப்பான்
 
இதனை அடுத்து இந்த பாடலும் இந்தப் படமும் சூப்பர் ஹிட்டானதை அடுத்து பூவையருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. ஏற்கனவே தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்திலும் பூவையர் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படத்தில் ஒரு பாடலைப் பாடி உள்ளதாகவும், இந்த பாடல் பூவையர் மட்டுமே பாடிய தனிப்பாடல் என்றும், இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளிவரும் என்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி அஜய்ஞானமுத்து இயக்கி வரும் ’விக்ரம் 58’ படத்திலும் ஒரு பாடலை பூவையர் பாடி இருப்பதாகவும் தெரிகிறது. பிகில் படத்தின் வெற்றியால் சிறுவன் பூவையருக்குஅடுத்தடுத்து பட வாய்ப்புகள்  குவிந்து வருவதால் அவரது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்