திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (09:30 IST)

பறந்து அடிக்கும் பேய்... "காஞ்சனா" படம் அனுபவம் குறித்து மேக்கிங் வீடியோ வெளியிட்ட நடிகை!

இசை தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலம் அடைந்தவர் பூஜா ராமசந்திரன். அதையடுத்து நண்பன், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார்.

மேலும் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழி படங்களிலம் நடித்து வந்த பூஜா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இதற்கிடையில் கணவருடன் சேர்ந்து அவ்வப்போது வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் காஞ்சனா 2 படத்தில் நடித்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை படத்தின் மேக்கிங் வீடியோவுடன் தெரிவித்துள்ளார். கடற்கரையில் படமாக்கபட்ட இந்த காட்சியில் தான் நடித்த போது கடுமையான வெப்பம் நிலவி கண், காது மூக்கு எல்லாவற்றிலும் மண் புகுந்தது என்று கூறி பதிவு செய்துள்ளார்.