திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (16:30 IST)

நதியாவின் கண்டீஷன்களால் கடுப்பான கமல்… பாபநாசம் 2 வில் நடிக்கப்போவது அவரின் ஆஸ்தான நடிகைதானாம்!

நடிகர் கமல் நடிக்க உள்ள பாபநாசம் 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நதியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் மீண்டும் எம் குமரன் திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தனது இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் கமல் கூட நடிக்கவே இல்லை. கமல் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு உருவான விக்ரம் படத்திலேயே அவர் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால் கமல் அவரை அந்த படத்துக்காக தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில் இப்போது பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த கூட்டணி இணையப் போவதாக சொல்லப்படுகிறது. பாபநாசம் 2 படத்தில் கௌதமிக்குப் பதிலாக நடிக்க நதியாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் இருந்து வந்து நடிக்க நடிகை நதியா போட்ட கண்டீஷன்கள் படக்குழுவினருக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்த, இப்போது அவர் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பதிலாக கமலின் ஆஸ்தான நடிகையான பூஜா குமாரை ஒப்பந்தம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.