செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (10:13 IST)

நடிகை பூஜா ஹெக்டே படப்பிடிப்பில் காயம்!

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு காலில் காயம் அடைந்துள்ளதாகவும், அந்த புகைப்படத்தையும் அவர் இணையத்தில் பதிவிட அது வைரல் ஆகியுள்ளது.