வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (17:55 IST)

விஜய்சேதுபதியின் ''மைக்கேல்'' பட டீஸரை வெளியிட்ட தனுஷ்!

michal
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மைக்கேல் பட டீசரை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய்சேதுபதி, சந்தீப் கிஷன், கவுதம் மேனன், வரலட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மைக்கேல்’

இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை மாலை 05.31 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டீசரை தனுஷ், ஹிந்தி டீசரை ராஜ் & டிகே, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னட டீசரை ரக்சித் ஷெட்டி, தெலுங்கு டீசரை ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேற்சொன்னபடி, மைக்கேல் என்ற படத்தின் டீசரை  நடிகர் தன் டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதில், ஆக்சன் காட்சிகள் அதிகளவு  இடம்பெற்றுள்ள நிலையில், மன்னிக்கும்போது நாம கடவுள் ஆகறோம் மைக்கேல் என்ற வசனமும், வேட்டை தெரியாத  மிருகத்தை மற்ற மிருகங்கள் வேட்டைஆடிடும் என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதிபதி மற்றும் கவுதம் மேனன் வித்தியாசமான நடிப்பை கொடுத்துள்ளதாகவும் டீசரில் தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Edited by Sinoj