1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (16:44 IST)

பொன்னியின் செல்வன் ஹிந்தி டீசரை வெளியிடும் பிரபலம் இவர்தான்!

ponniyin
மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீஸர் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ஹிந்தி டீசரை வெளியிடும் பிரபலம் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் நாளை இந்த படத்தின் 5 மொழிகளிலும் டீசர் வெளியாக உள்ள நிலையில் ஹிந்தி மொழியின் டீசரை பிரபல நடிகர் அமிதாப்பச்சன் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது 
இதனையடுத்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீசாகி சாரியார் வெளியிடுவார் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது