திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (12:01 IST)

பொன்னியின் செல்வன் டீசர் எப்போது? இதோ அப்டேட்!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை சென்னையில் வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.  படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆதித்ய கரிகாலன், ராஜராஜ சோழன், வந்தியதேவன், நந்தினி ஆகிய கேரக்டர்களின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
 
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை சென்னையில் வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் டீசர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இத்திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
இருப்பினும், டீசர் வெளியீடு தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. பொன்னியின் செல்வன் கதை, 1000 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சோழ வம்சத்தின் அரியணையைச் சுற்றியுள்ள சதியை மையமாகக் கொண்டது. இப்பத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 
 
பொன்னியின் செல்வன் படத்தில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், அர்ஜுன் சிதம்பரம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, கிஷோர், லால், ஜெயராம், ஜெயராம், ஜெயராம், ரியாஸ் கான், சாரா, டீஜே, அஷ்வின் ககுமானு மற்றும் பலர் நடித்துள்ளார்.