புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:36 IST)

அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் இருந்து வெளியேறிய மோகன் ராஜா- புதிய இயக்குனர் இவரா?

அந்தாதூன் தமிழ் ரீமேக்கை இயக்க பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இப்போது அந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்ல்ப்படுகிறது. கதைப்படி கார்த்திக்கின் கதாபாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற நடிகராகவே வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் தன் தம்பி நடிக்க இருக்கும் படத்தை அவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மோகன் ராஜா இயக்கினால் படத்துக்கு நல்ல ரீச் கிடைக்கும் என நினைத்த தயாரிப்பாளர் தியாகராஜன் இப்போது இயக்குனராக ஜே ஜே பிரட்ரிக்கை நியமித்துள்ளார். இவர் அமேசான் ப்ரைமில் வெளியான ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இயக்கியவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.