டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் பொன் மாணிக்கவேல்!

Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (15:30 IST)

நடிகர் பிரபுதேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு தயாராக காத்திருக்கிறது.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு
தேவி, குலேபகாவலி, மெர்க்குறி, சார்லி சாப்ளின் 2 என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. கண்டேன் பட இயக்குனர் ஏசி முகில் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்முறையாக அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரபு தேவா நடித்துள்ளார்.ஜோடியாக நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை ஜெயம் ரவி நடித்த "டிக் டிக் டிக்" படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நேமிசந்த் ஜாபக் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஜபக் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியிடம் சாட்டிலைட் உரிமம் விற்கப்பட்ட நிலையில் இப்போது டிஜிட்டல் உரிமையை அதன் கிளை நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலேயே வெளியிட முடிவு செய்து அவர்களிடமே விற்பனை செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :